சூடானிலிருந்து வெளியேற்றப்படும் ஜப்பானியர்கள்

சூடானிலிருந்து வெளியேற்றப்படும் ஜப்பானியர்கள்

1 mins read
47414290-18a1-4d76-b276-e1813e248bcf
-

தோக்கியோ: சூடானில் இருக்கும் தனது நாட்டினரை அங்கிருந்து பத்திரமாக வெளியேற்றத் தயாராகி வருகிறது ஜப்பானிய அரசாங்கம்.

கடந்த ஒரு வாரமாக சூடானின் ராணுவத்துக்கும் துணை ராணுவப் படைகளுக்கும் இடையே மூண்டுள்ள சண்டையில் இதுவரை ஏறத்தாழ 200 பேர் மாண்டுவிட்டனர்.

வான்வழித் தாக்குதல், பீரங்கித் தாக்குதல், துப்பாக்கிச்சூடு ஆகியவற்றால் தலைநகர் கார்ட்டோமும் மற்ற நகரங்களும் நிலைகுலைந்துள்ளன.

கிட்டத்தட்ட 60 ஜப்பானியர்கள் சூடானில் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது. அவர்களில் ஜப்பானிய தூதரக ஊழியர்களும் அடங்குவர் என்று ஜப்பானிய அரசாங்கம் தெரிவித்துள்ளது.