கோலாலம்பூர்: போதைப்பொருள் உட்கொண்டு தன்னிலை மறந்த ஆடவர் ஒருவர் காவல் நிலையத்தில் தகராறு செய்து காவல் அதிகாரியின் விரலைக் கடித்துத் துப்பியதாகத் தெரிவிக்கப்பட்டது.
இந்தச் சம்பவம் மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் உள்ள சுங்கை பிசி காவல் நிலையத்தில் கடந்த திங்கட்கிழமையன்று நிகழ்ந்தது.
காவல் நிலையத்தின் பாதுகாவல் சாவடிக்குச் சென்ற அந்த போதைப் புழங்கி அங்கிருந்த அதிகாரி மீது அமிலத்தை வீசியடிக்க இருப்பதாக மிரட்டல் விடுத்து போத்தல் ஒன்றில் இருந்த திரவத்தை அவர் மீது பீய்ச்சியடித்தார்.
பிறகு காவல்நிலையத்துக்குள் அத்துமீறி நுழைய முயன்ற அந்த ஆடவரை மூன்று அதிகாரிகள் தடுக்க முயன்றனர்.
அப்போது அதிகாரியின் விரலை அந்த ஆடவர் கடித்துத் துப்பினார்.
அதிகாரியின் விரலின் மேல் பகுதி துண்டிக்கப்பட்டது.
தாக்குதல் நடத்திய 34 வயது ஆடவர் கைது செய்யப்பட்டார்.

