வாஷிங்டன்: அமெரிக்காவின் டெக்சஸ் மாநிலத்தில் உள்ள வாகன நிறுத்தும் இடத்தில் இளம் பெண் ஒருவர் தவறான காரில் ஏறினார்.
தமது தவற்றை உணர்ந்து அவர் மன்னிப்பு கேட்டபோதிலும் அவரையும் அவரது தோழியையும் நோக்கி அந்த காரில் இருந்த ஆடவர் துப்பாக்கியால் சரமாரியாகச் சுட்டார். அந்த இரண்டு இளம் பெண்களில் ஒருவர் கடுமையாக காயமுற்றதாக காவல்துறையினர் தெரிவித்தனர். சம்பவ இடத்திலிருந்து அவர் ஹெலிகாப்டர் மூலம் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். துப்பாக்கியால் சுட்டதாகச் சந்தேகிக்கப்படும் ஆடவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

