உக்ரேனில் நேட்டோ தலைவர்

உக்ரேனில் நேட்டோ தலைவர்

2 mins read
09ee1821-3283-436d-bf57-2c06dfb78e02
-

கியவ்: உக்­ரேன் தலை­ந­கர் கியவ்வுக்கு நேட்­டோ­வின் தலை­வர் பய­ணம் மேற்­கொண்­டார்.

உக்­ரேன் மீது ரஷ்யா படை­யெ­டுத்த பிறகு அங்கு திரு ஜன்ஸ் ஸ்டோல்­டென்­பர்க் பய­ணம் மேற்­கொண்­டது இதுவே முதல்­முறை.

தன்­மீது தாக்­கு­தல் நடத்­தும் ரஷ்­யா­வுக்­குப் பதி­லடி கொடுக்க தயா­ராகி வரும் உக்­ரே­னுக்கு ஆத­ரவு தெரி­விக்­கும் வகை­யில் இந்­தப் பய­ணம் அமைந்­தது.

ரஷ்­யா­வுக்கு எதி­ரான போரில் உயி­ரி­ழந்த உக்­ரே­னிய வீரர்­களுக்கு மரி­யாதை செலுத்­தும் வகை­யில் மலர் வளை­யம் வைத்­தார் திரு ஸ்டோல்­டென்­பர்க்.

அதன் பிறகு, கிய­வ்வில் உள்ள செயிண்ட் மைக்­கல்ஸ் சதுக்­கத்­தில் உக்­ரே­னிய வீரர்­க­ளால் பறி­மு­தல் செய்­யப்­பட்ட ரஷ்ய கவச வாக­னங்­களை அவர் பார்­வை­யிட்­டார்.

திரு ஸ்டோல்­டென்­பர்க்­கின் உக்­ரேன் பய­ணம் குறித்து உக்­ரே­னி­யத் தலை­வர்­களும் நேட்டோ அதி­கா­ரி­களும் உட­ன­டி­யா­கத் தக­வல் வெளி­யி­ட­வில்லை.

தலை­வர்­க­ளின் பாது­காப்­பைக் கருதி போர்க்­கா­லங்­களில் இத்­த­கைய பய­ணங்­கள் ரக­சி­ய­மாக வைத்­துக்கொள்ளப்படுவது வழக்­கம். திரு ஸ்டோல்­டென்­பர்க்­கின் கியவ் பய­ணத்­தை­யொட்டி அந்­ந­க­ரில் பாது­காப்­புப் பணி­கள் முடுக்­கி­வி­டப்­பட்­டன.

அவ­ருக்­குப் பலத்த பாது­காப்பு வழங்­கப்­பட்­டது.

இதற்­கி­டையே, நேட்­டோ­வில் சேர உக்­ரேன் விருப்­பம் தெரி­வித்­துள்­ளது. உக்­ரே­னின் கிழக்­குப் பகு­தி­யில் ரஷ்­யப் படை­கள் அத்து­மீறி நுழைந்து தனது ராணுவ வீரர்­க­ளு­டன் போரி­டத் தொடங்­கி­யதை அடுத்து, உக்­ரேனை நேட்டோ அதன் உறுப்­பு நாடாக விரை­வா­கச் சேர்த்­துக்­கொள்ள வேண்­டும் என்று உக்­ரே­னிய அதி­பர் வொலோ­டி­மி­யர் ஸெலென்ஸ்கி தெரி­வித்­தார்.

இது ஒரு­பு­றம் இருக்க, கிழக்கு ஐரோப்­பா­வில் தனது செல்­வாக்கை முடக்க நேட்டோ செயல்­பட்டு வரு­வ­தாக ரஷ்யா குற்­றம் சாட்­டு­கிறது.

திரு ஸ்டோல்­டென்­பர்க்­கின் உக்­ரேன் பய­ணம் குறித்து ரஷ்யா உட­ன­டி­யா­கத் தக­வல் தெரி­விக்க­வில்லை.