ஹியூஸ்டன்: அமெரிக்காவின் ஒக்கலஹோமா மாநிலத்தில் ஏற்பட்ட மிக சக்திவாய்ந்த சுழல்காற்று காரணமாக குறைந்தது இரண்டு பேர் மாண்டுவிட்டதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்தனர்.
பலருக்குக் காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் தங்கள் வீட்டில் மாட்டிக்கொண்டு வெளியே வர முடியாமல் தவிப்பதாகவும் அறியப்படுகிறது.
மீட்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.