நோம் பென்: கம்போடியப் பிரதமர் ஹுன் சென்னின் மூத்த மகன் நேற்று அதிகாரபூர்வமாக நான்கு நட்சத்திர ஜெனரலாக நியமிக்கப்பட்டார்.
இந்தப் பதவி உயர்வு மூலம் தமக்குப் பிறகு தமது மகனான திரு ஹுன் மானெட்டைக் (படம்) கம்போடியாவின் பிரதமராக நியமிக்க திரு ஹுன் சென்னுக்கு எண்ணம் இருப்பதாகக் கூறப்படுகிறது.
கம்போடிய ராணுவத் தலைவரான திரு ஹுன் மானெட்டின் பதவி உயர்வு விழாவில் 1,000க்கும் மேற்பட்ட மூத்த ராணுவ அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
விழாவுக்குக் கம்போடியத் தற்காப்பு அமைச்சர் டியே பான் தலைமை தாங்கினார்.
நாட்டுக்கும் ராணுவத்துக்கும், கம்போடிய மக்களுக்கும் சேவையாற்ற திரு ஹுன் மானெட் மேற்கொண்ட முயற்சிகளை அவருக்கு வழங்கப்பட்ட பதவி உயர்வு பிரதிபலிப்பதாக அமைச்சர் டியே கூறினார்.

