உக்ரேன் போர்: அவதிக்குள்ளான கர்ப்பிணியைக் காட்டும் படத்திற்கு விருது

உக்ரேன் போர்: அவதிக்குள்ளான கர்ப்பிணியைக் காட்டும் படத்திற்கு விருது

1 mins read
ec9fb9de-12b1-4237-b776-42a59698b788
உக்ரேனைச் சேர்ந்த இந்த 32 வயது கர்ப்பிணி பின்னர் உயிரிழந்தார். படம்: இபிஏ -

கியவ்: உக்ரேனின் மரியபோல் நகரில் உள்ள மகப்பேற்று மருத்துவமனை ஒன்றின்மீது ரஷ்யப் படைகள் தாக்குதல் மேற்கொண்டிருக்கின்றன; அதனால் அவதிக்குள்ளான கர்ப்பிணியைக் காட்டும் இப்படம் 'வோர்ல்ட் பிரஸ் ஃபோட்டோ' எனப்படும் ஊடகப் படங்களுகளுக்கான அனைத்துலக விருதை வென்றுள்ளது.

படத்தை எடுத்தவர் உக்ரேனைச் சேர்ந்த எவ்ஜெனி மலோலெட்கா எனும் 'அசோசியேட்டட் பிரஸ்' ஊடக நிறுவனத்தின் படச் செய்தியாளர்.

இவ்வாண்டு மார்ச் மாதம் ஒன்பதாம் தேதியன்று மேற்கொள்ளப்பட்ட தாக்குதலால் 32 வயது ஐரினா கலினினா எனும் படத்தில் இருக்கும் கர்ப்பிணி பாதிக்கப்பட்டார்.

மிரன் (அமைதி என்று பொருள்) என்ற பெயர் சூட்டப்பட்ட இவரின் குழந்தை உயிரின்றிப் பிறந்தது.

அரை மணிநேரம் கழித்து திருவாட்டி கலினினாவும் உயிரிழந்தார்.