க்டினியா (போலந்து): உலகின் ஆக வயதான நீர்ச்சறுக்கு (விண்ட்சர்ஃபிங்) வீரராகும் முயற்சியில் இறங்கியுள்ளார் 88 வயது பியோட்ர டுடெக்.
போலந்தைச் சேர்ந்த இவர் 40 ஆண்டுகளாக நீர்ச்சறுக்கில் ஈடுபட்டு வருகிறார்.
80 வயதான பிறகு நண்பர்கள் இவரைச் செல்லமாக 'ஜூனியர்' என்றழைக்கத் தொடங்கினர்.
"உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள நான் நீர்ச்சறுக்கில் ஈடுபட்டு வருகிறேன். ஒருவரின் ஆயுள் காலத்தை நீட்டிக்க இதுவே ஆகச் சிறந்த வழி என்பது என் கருத்து. இந்த விளையாட்டில் ஈடுபட உடல் ஆரோக்கியம் அதிகம் தேவை," என்கிறார் திரு டுடெக்.

