சொந்த நகரத்தையே தவறுதலாகத் தாக்கிய ரஷ்யப் போர் விமானம்

சொந்த நகரத்தையே தவறுதலாகத் தாக்கிய ரஷ்யப் போர் விமானம்

1 mins read
d6aa5a36-924d-466f-8971-78b66df109f2
-

மாஸ்கோ: ரஷ்யப் போர் விமா­னம் ஒன்று தவ­று­த­லாக சொந்த நக­ர­மான பெல்­கொ­ரோட்­டில் தாக்­கு­தல் நடத்­தி­யது. இந்த நக­ரம் உக்­ரே­னுக்கு மிக அரு­கில் உள்­ளது. தாக்­கு­தல் கார­ண­மாக மிகப் பெரிய வெடிப்பு ஏற்­பட்டு மூன்று பேர் காயம் அடைந்­த­னர்.

போர் விமா­னம் நடத்­திய தாக்­கு­தல் கார­ண­மாக பல வாக­னங்­கள் சேத­ம­டைந்­தன. கட்­ட­டம் ஒன்று சேத­ம­டைந்து அதில் இருந்த சன்­னல்­கள் சுக்­கு­நூ­றாக உடைந்­தன. சாலை­யில் பல கான்­கி­ரீட்­டு­கள் சித­றிக் கிடந்­தன.

கடை ஒன்­றின் கூரை மீது கார் ஒன்று கவி­ழ்ந்து கிடந்­ததைக் காணொ­ளி­கள் காட்­டின.

பெல்­கொ­ரோட் நக­ரில் அவ­ச­ர­நிலை அறி­விக்­கப்­பட்­டது. தாக்­கு­தல் கார­ண­மாக பிர­தான சாலை ஒன்­றின் குறுக்கே 20 மீட்­டர் அளவுக்கு பள்­ளம் ஏற்­பட்­டுள்­ள­தாக பெல்­கொ­ரோட் நக­ரின் ஆளு­நர் வியா­செஸ்­லாவ் கிளாட்­கோவ் தெரி­வித்­தார்.

தாக்­கு­தல் கார­ண­மாக உயி­ரி­ழப்­பு­கள் ஏற்­ப­ட­வில்லை என்று அவர் கூறி­னார். பாதிக்­கப்­பட்ட கட்­ட­டத்­தின் குடி­யி­ருப்­பா­ளர்­கள் இர­வோடு இர­வாக அங்­கி­ருந்து வெளி­யேற்­றப்­பட்­ட­தாக அவர் கூறி­னார்.

போர் விமா­னம் தவ­று­த­லாக தாக்­கு­தல் நடத்­தி­ய­தாக ரஷ்­யத் தற்­காப்பு அமைச்சு தெரி­வித்­தது. ஆனால் எத்­த­கைய ஆயு­தம் பயன்­ப­டுத்­தப்­பட்­டது என்­பது குறித்து அது தக­வல் வெளி­யி­ட­வில்லை.

ரஷ்யப் போர் விமானம் சொந்த மண்ணில் தவறுதலாக நடத்திய தாக்குதலின் காரணமாக சேதமடைந்த கட்டடம். படம்: இபிஏ