ஜகார்த்தா: இந்தோனீசியாவில் அடுத்த ஆண்டு அதிபர் தேர்தல் நடைபெறுகிறது. இந்நிலையில், மத்திய ஜாவா ஆளுநர் கஞ்சார் பிரனோவோவைத் தனது அதிபர் தேர்தல் வேட்பாளராக ஆளும் கட்சி அறிவித்துள்ளது. பிடிஐ-பி கட்சித் தலைவர் மேகவதி சுகார்னோவின் இந்த அறிவிப்பு மூலம் அடுத்த ஆண்டு நடைபெறும் அதிபர் தேர்தலில் மும்முனைப் போட்டி நிலவும் என்று தெரிகிறது.
இந்தோனீசியத் தற்காப்பு அமைச்சர் பிரபோவோ சுபியாந்தோவும் தலைநகர் ஜகார்த்தாவின் முன்னாள் ஆளுநர் அனீஸ் பஸ்வெடானும் அதிபர் தேர்தலில் போட்டியிடுகின்றனர்.

