கெய்ரோ: அண்மைய நாள்களாக சூடானின் ராணுவத்துக்கும் துணை ராணுவப் படைகளுக்கும் இடையே கடுமையான சண்டை நிலவி வந்தது. இந்நிலையில், அடுத்த 72 மணி நேரத்துக்கு சண்டையைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க துணை ராணுவப் படையான ஆர்எஸ்எஃப் இணங்கியுள்ளளது.
சண்டை நிறுத்தம் சூடான் நேரப்படி நேற்று அதிகாலை 6 மணிக்குத் தொடங்கியது.
கடந்த ஆறு நாள்களாக சூடானில் வன்முறை தாண்டவம் ஆடியது. நோன்புப் பெருநாளை முன்னிட்டு பாதிக்கப்பட்ட பகுதிகளிலிருந்து பொதுமக்களை வெளியேற்ற இந்தச் சண்டை நிறுத்தம் வகைசெய்யும் என்று கூறப்படுகிறது. வெளியேற்றப்படுவோர் நோன்புப் பெருநாளின்போது தங்கள் குடும்பத்தாருடன் நேரம் செலவழிக்கலாம் என்று ஆர்எஸ்எஃப் கூறியது. சூடானிய ராணுவம் ஆட்சியைக் கவிழ்க்க முயன்றதாகவும் அதை முறியடிக்கவே செயல்பட வேண்டி இருந்ததாகவும் ஆர்எஸ்எஃப் தெரிவித்தது.

