உலகில் ஆக அதிக எண்ணிக்கையில் முஸ்லிம் மக்களைக் கொண்டுள்ள இந்தோனீசியாவின் அச்சே மாநிலத்தில் தலைநகர் பண்டா அச்சேயில் நோன்புப் பெருநாளையொட்டி நேற்று காலை வழிபாட்டில் ஈடுபட்ட மக்கள். இந்தோனீசியா, மலேசியா உள்ளிட்ட நாடுகளில் கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு கொவிட்-19 கட்டுப்பாடுகளின்றி நோன்புப் பெருநாள் கொண்டாடப்பட்டது. கிருமிப் பரவல் குறித்த அச்சமும் மக்களிடையே குறைந்துள்ளது.
படம்: ஏஎஃப்பி

