மியன்மாரில் சூறாவளி; அறுவர் மரணம்

மியன்மாரில் சூறாவளி; அறுவர் மரணம்

1 mins read
0f44dc48-e513-41cf-97cf-2c8b79da361c
-

யங்கூன்: மியன்மாரின் மத்தியப் பகுதியைத் தாக்கிய சுழற்காற்றால் குறைந்தது அறுவர் மாண்டதாகவும் 109 பேர் காயமுற்றதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சிங்கப்பூர் நேரப்படி நேற்று முன்தினம் இரவு 8.15 மணியளவில் நேப்பிட்டோ யூனியன் பிரதேசத்தின் சில கிராமங்களைச் சுழற்காற்று தாக்கியது.

அறுவர் சம்பவ இடத்திலேயே மாண்டனர், பலத்த காற்றால் 109 பேர் காயமுற்றனர்; காயமடைந்தோரில் 16 பேர் கவலைக்கிடமாக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.