குரோட்டன் (அமெரிக்கா): அமெரிக்காவின் கனெக்டிக்கட் மாநிலத்தில் எரிபொருள் ஏற்றிச் செல்லும் லாரி முக்கியப் பாலம் ஒன்றின்மேல் விபத்துக்கு உள்ளானதால் மிகப் பெரிய வெடிப்பு நிகழ்ந்தது. இந்த அசம்பாவிதத்தால் குறைந்தது ஒருவர் மாண்டார், இருவர் காயமடைந்தனர்.
இன்டர்ஸ்டேட் 95 விரைவுச்சாலையில் இருக்கும் கோல்ட் ஸ்டார் பாலத்தில் இச்சம்பவம் நிகழ்ந்தது. இது குரோட்டன் நகரில் அமைந்துள்ளது.
பயணிகள் வாகனம் ஒன்றின் சக்கரம் எரிந்ததன் பின்விளைவாக வெடிப்பு ஏற்பட்டதென அதிகாரிகள் தெரிவித்தனர். 2021ல் அமெரிக்காவில் நிகழ்ந்த சுமார் 40,000 கனரக லாரி விபத்துகளில் கிட்டத்தட்ட 5,700 பேர் மாண்டனர்.

