மட்ரிட்: ஸ்பெயின் தலைநகர் மட்ரிட்டில் இருக்கும் உணவகம் ஒன்றில் தீ மூண்டதைத் தொடர்ந்து குறைந்தது இருவர் மாண்டனர், 10 பேர் காயமடைந்தனர்.
சாலமேன்கா எனும் பகுதியில் உள்ள 'புரோ கனாக்லியா பார் & ரெஸ்டோ' எனும் இத்தாலிய உணவகத்தில் நேற்று முன்தினம் இரவு தீ மூண்டது. உணவில் மதுபானத்தைத் தெளித்து செய்யப்படும் சாகசத்தைப் புரிந்தபோது தீ மூண்டதாக சம்பவத்தை நேரில் கண்ட ஒருவர் தெரிவித்திருந்தார்.

