ரெசன் (வட மேசிடோனியா): பல்லாயிரம் ஆண்டுகளாக அதிக பாதிப்பின்றி செழிப்பாக இருந்தது பிரெஸ்பா ஏரி. இப்போதோ பருவநிலை மாற்றம், சுற்றுச்சூழல் தூய்மைக்கேடு உள்ளிட்ட காரணங்களால் இது அதிவேகமாக வற்றி வருகிறது.
அல்பேனியா, கிரீஸ், வட மேசிடோனியா ஆகிய நாடுகளின் எல்லைப் பகுதியில் இந்த ஏரி உள்ளது. ஆயிரக்கணக்கான உயிரினங்கள் இதன் நீரை நம்பியிருப்பதாகக் கருதப்படுகிறது.
உலக வெப்பநிலை அதிகரித்து வருவதால் ஆண்டுதோறும் இங்கு பொழியும் பனியின் அளவு குறைந்து வருகிறது. அதனால் பிரெஸ்பா ஏரியில் சேரவேண்டிய நீரின் அளவும் குறைந்து போகிறது.

