ஜோகூரில் முகக்கவசம் முக்கியம்

ஜோகூரில் முகக்கவசம் முக்கியம்

1 mins read
d2457666-a8d0-46bc-81ed-03d814c716c1
-

ஜோகூர் பாரு: நோன்­புப் பெரு­நாள் கொண்­டாட்­டங்­களில் ஈடு­பட்டு இருக்­கும் ஜோகூர் மக்­கள் கொவிட்-19 நோய்த்­தொற்­றில் இருந்து தங்­க­ளைப் பாது­காக்க தொடர்ந்து முகக்­க­வ­சம் அணி­யு­மாறு கேட்­டுக்­கொள்­ளப்­பட்டு உள்­ள­னர்.

இருப்­பி­னும், அது கட்­டா­யம் என அறிவிக்கப்படவில்லை.

சுகா­தா­ரப் பழக்­க­வழக்­கங்­களை­யும் மக்கள் தொட­ரு­மாறு ஜோகூர் சுகா­தார மற்­றும் ஒரு­மைப்­பாட்­டுக் குழுத் தலை­வர் லிங் டியன் சூன் தெரி­வித்து உள்­ளார்.

ஜோகூர் முத­ல­மைச்­சர் ஒன் ஹஃபிஸ் காஸி தமது அதி­கா­ரத்­துவ இல்­லத்­தில் நடத்­திய நோன்­புப் பெரு­நாள் பொது வர­வேற்பு நிகழ்ச்­சி­யில் பங்­கேற்ற அவர், செய்­தி­யா­ளர்­க­ளி­டம் பேசி­னார்.

"ஜோகூர் மாநி­லத்­தில் கொவிட்-19 நில­வ­ரம் கட்­டுக்­குள் இருக்­கிறது. இருப்­பி­னும், இந்த விழாக் காலத்­தில் உற­வினர் மற்­றும் நண்­பர்­க­ளின் வீடு­க­ளுக்­குச் செல்­லும்­போது முன்­னெச்­ச­ரிக்கை அம்­சங்­களைக் கடைப்­பி­டிப்­பது விவே­க­மான செய­லாக இருக்­கும்," என்று அவர் கூறி­னார்.

மேலும் அவர் தெரி­விக்­கை­யில், "நோய் எளி­தில் தாக்­கக்­கூ­டிய அபா­யத்­தில் உள்­ள­வர்­கள் கட்­டா­யம் முகக்­க­வ­சம் அணிய வேண்­டும். குறிப்­பாக, நோன்­புப் பெரு­நாள் தொடர்­பில் நடத்­தப்­படும் பொது வர­வேற்பு நிகழ்ச்­சி­களில் பெருங்­கூட்­டம் காணப்­படும் என்­ப­தால் அவற்­றில் கலந்­து­கொள்­வோர் முகக்­க­வ­சம் அணி­வது இன்­றி­ய­மை­யா­தது.

"அவர்­கள் அடிக்­கடி தங்­க­ளது கைக­ளைச் சுத்­தம் செய்து­கொள்ள வேண்­டும்," என்­றார்.

ஜோகூர் மாநி­லத்­தில் கடந்த இரு வாரங்­களில் 289 பேருக்கு கொவிட்-19 தொற்று உறுதி செய்­யப்­பட்­ட­தா­க­வும் நேற்று முன்­தி­னம் (சனிக்­கி­ழமை) மட்­டும் 13 பேரி­டம் தொற்று கண்­ட­றி­யப்­பட்­ட­தா­க­வும் அவர் தெரி­வித்­தார்.