தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

4 வயது சிறுவன் மரணம்: பள்ளியில் சேர்ந்த முதல் நாளே துயரம்

1 mins read
33426a88-352d-4dce-a5b4-b31f6828751a
-

சிம்மோர்: மலேசியாவின் பேராக் மாநிலத்தில் பள்ளியில் சேர்க்கப்பட்ட முதல் நாளே நான்கு வயது குழந்தை பள்ளி அருகிலுள்ள குளத்தில் விழுந்துவிட்டது. தனேஷ் நாயர் என்னும் இச்சிறுவனை கடந்த திங்கட்கிழமை (ஏப்ரல் 17) சிம்மோரில் உள்ள தனியார் பாலர் பள்ளியில் இவனது தந்தை விஜய் வேலாயுதம், 42, சேர்த்தார். அவர் வீடுதிரும்பிய சில மணி நேரங்களில் தனேஷ் கீழே விழுந்துவிட்டதாகவும் பள்ளி வாகனத்திலேயே அருகிலுள்ள மருத்துவ மனைக்குக் கொண்டு செல்லப் பட்டதாகவும் அவரது மனைவி நீலவேணிக்கு பள்ளியிலிருந்து தகவல் தெரிவிக்கப்பட்டது. கிட்டத்தட்ட ஒரு வாரம் அளிக்கப்பட்ட சிகிச்சை பலனளிக்காமல் சிறுவன் உயிர் நேற்று பிரிந்தது. நேரில் சென்று விசாரித்தபோதுதான் தமது மகன் தனேஷ் குளத்தில் விழுந்தது தெரியவந்ததாகவும் இந்த இறப்புக்கு பள்ளி நிர்வாகத்தின் கவனக்குறைவு காரணம் என சிம்மோர் காவல் நிலையத்தில் தாம் புகார் செய்துள்ளதாகவும் விஜய் வேலாயுதம் கூறியுள்ளார்.