லண்டன்: இரண்டாம் எலிசபெத் அரசியார் மறைந்து எட்டு மாதங்கள் நிறைவடைந்த பின்னர் மன்னர் சார்ல்ஸ் இங்கிலாந்தின் மன்னராக முறைப்படி அடுத்த மாதம் முடிசூட இருக்கிறார்.
இதற்கான ஏற்பாடுகளில் பக்கிங்ஹாம் அரண்மனை முழுவீச்சில் ஈடுபட்டுள்ளது.
மே 6ஆம் தேதி நடைபெற இருக்கும் முடிசூட்டு விழா, 70 ஆண்டுகளில் பிரிட்டனில் நடைபெறும் முதலாவது முடிசூட்டு விழா. வரலாற்றில் இரண்டாவது இங்கிலாந்து மன்னர் முடிசூட்டு விழாவும் இதுதான்.
இந்த முடிசூட்டு விழாவின் போது பாரம்பரிய மரபுப்படி செங்கோல் ஏந்தி மூன்றாம் சார்ல்ஸ் மன்னர் அரியணையில் அமர்வார்.
அதே நாளில் இங்கிலாந்து ராணியாக கமிலா பார்க்கர் முறைப்படி அறிவிக்கப்படுவார்.

