யங்கூன்: மியன்மார் தேர்தல் ஆணையத்தின் துணைத் தலைவரை கலகப் படையினர் சுட்டுக் கொன்றுவிட்டதாக அந்நாட்டு ராணுவம் கூறி உள்ளது. அங்கு பிரபலமான ஒருவர் கொல்லப்பட்டிருக்கும் ஆக அண்மையச் சம்பவம் அது. ஈராண்டுகளுக்கு முன்னர் புரட்சி மூலம் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றிய மியன்மார் ராணுவம், எதிரி களை ஒழிப்பதில் தீவிரம் காட்டி வருகிறது. அரசாங்கத் தின் கவனம் அதிலேயே உள்ளதால் சமூகத்தின் அமைதியின்மையும் பொருளி யல் சீர்குலைவும் ஏற்படும் அபாயம் நிலவுகிறது. 'மக்களின் தற்காப்புப் படை' என்று தன்னைத் தானே கூறிக்கொள்ளும் குழு ஒன்று ராணுவத்தின் எதிரிகளுடன் கைகோத்துச் செயல்படுகிறது. ராணுவ ஆட்சியுடன் இணைந்து பணியாற்றும் அதிகாரிகளைக் கொல்வது அதன் இலக்காக உள்ளது.
சனிக்கிழமை அச்செயலை நிறைவேற்றும் விதமாக கிழக்கு யங்கூனில் உள்ள திங்காங்யுன் நகரமன்றத்தில் மத்திய தேர்தல் ஆணையத்தின் கூடுதல் இயக்குநர் சாய் கியாவ் து என்பவரை அக்குழு சுட்டுக் கொன்றதாக ராணுவத்தின் தகவல் பிரிவு கூறியது. இருப்பினும் மேல்விவரங்களை அது வெளியிடவில்லை.

