தைப்பே: தைவானில் S$870 கடனுக்காக நடந்த சண்டையில் பெண் ஒருவர் மற்றொரு பெண்ணின் முகத்தில் கொதிக்கும் சூப்பை ஊற்றிவிட்டார்.
அலறித் துடித்த அந்தப் பெண் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவரது முகத்திலும் கழுத்திலும் கடுமையான தீப்புண்கள் ஏற்பட்டன. தைவானிய பொழுதுபோக்குக் கூடம் ஒன்றில் இரு பெண்கள் சண்டையிடும் காணொளி சமூக ஊடகங்களில் பரவியது.
இரு பெண்களின் சண்டையை ஆண் ஒருவர் விலக்கிவிடுவதும் அப்போது ஆத்திரமடைந்த ஒரு பெண் அங்கு அடுப்பில் இருந்த சூடான சூப்பை மற்றொரு பெண் மீது ஊற்றுவதும் காணொளியில் பதிவாகி இருந்தது. ஸித்துன் மாவட்டத்தில் நடைபெற்ற சம்பவம் தொடர்பில் வெள்ளிக்கிழமை அதிகாலை 4.20 மணியளவில் தகவல் கிடைத்ததாக காவல்துறை கூறியது.

