சீனாவில் தொலைந்துபோன குழந்தையை மீட்ட அறிவுசார் குறைபாடு இருக்கும் சிறுவன்

சீனாவில் தொலைந்துபோன குழந்தையை மீட்ட அறிவுசார் குறைபாடு இருக்கும் சிறுவன்

1 mins read
6d02a6b4-dddd-4e6a-bbd3-5ee98c90adbb
அறிவுசார் குறைபாடு உள்ள சிறுவனின் துணிகரச் செயல். படம்: வீபோ சமூக வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்ட காணொளியில் இடம்பெற்ற காட்சி -

பெய்ஜிங்: சாலையோரத்தில் தனியாக அமர்ந்திருந்த பெண் குழந்தையைத் தனது முதுகில் சுமந்தபடி காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றிருக்கிறார் அறிவுசார் குறைபாடு உள்ள ஒரு பதின்ம வயது சிறுவன்.

இச்சம்பவம் சீனாவின் ஷான்சி மாநிலத்தில் நிகழ்ந்தது.

குழந்தை கடத்தப்படக்கூடும் என்ற அச்சம் 17 வயது ஹுவாங் யிபோவிற்கு இருந்தது.

அதனால் அவர் குழந்தையை சி'யென் நகர காவல் நிலையத்துக்குக் கொண்டு சென்றிருக்கிறார்.

ஏப்ரல் மாதம் ஏழாம் தேதியன்று நிகழ்ந்த இச்சம்பவம் கண்காணிப்பு கேமராக்களில் பதிவானது.

அந்தக் காணொளி சீனாவின் சமூக வலைத்தளமான 'வீபோ'வில் பதிவேற்றம் செய்யப்பட்டது.

அதில் பலர் சிறுவனைப் பெரிதும் பாராட்டினர்.

'அன்பு செலுத்துவதற்கும் வீரத்துடன் செயல்படுவதற்கும் அறிவுசார் குறைபாடு தடையல்ல' என்றுகூட ஒருவர் சொன்னார்.