அழகிய தீவின் விலை $249,000; அடிப்படை வசதி கிடையாது

அழகிய தீவின் விலை $249,000; அடிப்படை வசதி கிடையாது

1 mins read
cc2a1b39-266b-410d-ae66-b9a49412fd2d
தீவு ஸ்காட்லாந்தில் உள்ளது. படம்: கால்பிரெய்த் குழுமம் -

கிளாஸ்கோ: மனிதர்கள் இல்லாத 10 ஹெக்டர் பரப்பளவு கொண்ட தீவு ஒன்று விற்பனைக்கு விடப்பட்டுள்ளது.

ஸ்காட்லாந்தின் எழில் கொஞ்சும் கடலோரப் பகுதிகளின் அற்புதமான காட்சிகளை இங்கிருந்து காணலாம்.

இதன் விலை 150,000 பவுண்ட் (249,000 வெள்ளி).

யாரும் இல்லாத பார்லோக்கோ எனும் இத்தீவில் பறவைகள்தான் உரிமையாளர்களுக்குத் துணை.

ஸ்காட்லாந்தின் கால்பிரெய்த் எனும் சொத்து நிறுவனம் வியாழக்கிழமையன்று (20 ஏப்ரல்) இந்தத் தீவை விற்பனைக்கு விட்டது.

டம்ஃப்ரீஸ் அண்ட் காலோவே வட்டாரத்தில் பார்லோக்கோ அமைந்துள்ளது.

அடிப்படை வசதிகள் இல்லாவிட்டாலும் தீவை வாங்க சிலர் அக்கறை காட்டி வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.