ஒரே எண்களைக் கொண்டு மூன்று முறை லாட்டரி வெற்றி

ஒரே எண்களைக் கொண்டு மூன்று முறை லாட்டரி வெற்றி

1 mins read
a23c4743-38f4-4fa9-8475-69f56291bfdd
தனது அடையாளத்தை வெளியிட விரும்பாத அதிர்ஷ்டசாலி. படம்: மேரிலண்ட் லாட்டரி -

நியூயார்க்: அமெரிக்காவில் ஓர் ஆடவர் தான் எடுத்த ஒரே எண் வரிசையைக் கொண்டு 11 மாதங்களில் மூன்று முறை லாட்டரி வென்றுள்ளார்.

தனது அடையாளத்தை வெளியிட விரும்பாத அந்த 52 வயது லாரி ஓட்டுநர், ஏப்ரல் மாதம் 13ஆம் தேதியன்று மூன்றாவது முறையாக லாட்டரி தொகையை வென்றதாகத் தெரிவிக்கப்பட்டது.

வெற்றித் தொகை 50,000 டாலர் (67,800 வெள்ளி).

ஒரே ஐந்து எண் வரிசையைப் பயன்படுத்தி இவர் 2022ஆம் ஆண்டு மே மாதம் இருமுறை 50,000 டாலர் தொகையை வென்றிருக்கிறார்.

மூன்று முறையும் ஆடவர் '48548' எனும் எண் வரிசைக்கு ஒரு டாலர் பந்தயம் கட்டினார்.