ஒருங்கிணைந்த உல்லாசத் தலம் என வரும்போது, சிங்கப்பூருடன் ஜப்பான் ஆடு புலி ஆட்டம் விளையாடுகிறது.
ஒசாகாவில் அத்தகைய தளத்தை அமைக்க ஜப்பான் இந்த மாதம் பச்சைக் கொடி காட்டியுள்ளது.
சிங்கப்பூர் சுற்றுப்பயணத் துறையில் ஒருங்கிணைந்த உல்லாசத் தலங்கள் ஏற்படுத்தும் தாக்கத்தைக் கவனிக்க ஜப்பான் தவறவில்லை.
2010ல் சிங்கப்பூர் அதன் இரு உல்லாசத் தளங்களைத் திறந்ததன் மூலம் சுற்றுலாத் தலமாக அதன் இடத்தை உறுதிசெய்து கொண்டது.
அதேபோல, நீடித்து நிலைத்த சுற்றுப்பயணத் துறை வளர்ச்சியைப் பெற ஒசாகா ஒருங்கிணைந்த உல்லாசத் தலம் முக்கிய பங்கு வகிக்க முடியும் என்று ஜப்பான் நம்புகிறது.
2030க்குள் குறைந்தது 60 மில்லியன் சுற்றுப்பயணிகளை வரவேற்க ஜப்பான் விழைகிறது.
ஜப்பானின் ஒசாகாவில் ஒருங்கிணைந்த உல்லாசத் தலம் திறக்கப்படும்போது சிங்கப்பூரின் உல்லாசத் தலத்துக்குப் போட்டியாக அது அமையும் எனக் கூறப்படுகிறது.
ஒசாகாவில் ஒருங்கிணைந்த உல்லாசத் தலம் 2029 வாக்கில் திறக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையே, பேங்காக் உள்ளிட்ட ஐந்து இடங்களில் ஒருங்கிணைந்த உல்லாசத் தளங்களை முன்மொழிந்த நாடாளுமன்ற அறிக்கைக்கு தாய்லாந்து கடந்த ஜனவரியில் ஒப்புதல் அளித்தது. அதன்படி, இந்த வட்டாரத்தில் சுற்றுப்பயணிகளை ஈர்க்கும் புதிய நடுவமாக தாய்லாந்து விளங்கக்கூடும்.
சிங்கப்பூரைப் போன்றே அதே வரிக் கட்டமைப்பை தாய்லாந்தும் கடைப்பிடித்தால் சிங்கபூருக்குப் போட்டியாக அது விளங்கக்கூடும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

