ராணுவத்தில் பெரிய மாற்றங்கள் செய்ய ஆஸ்திரேலியா திட்டம்

ராணுவத்தில் பெரிய மாற்றங்கள் செய்ய ஆஸ்திரேலியா திட்டம்

1 mins read
c6ddf30d-9294-4525-9afc-fa08ad3ed526
-

கேன்­பெரா: ஆஸ்­தி­ரே­லிய அர­சாங்­கம் அதன் தொலை­தூர தாக்­கு­தல் ஆற்­றல், உள்­நாட்­டில் ஆயு­தங்­கள் தயா­ரிப்பு, அர­ச­தந்­தி­ரம் ஆகி­ய­வற்­றுக்கு முன்­னு­ரிமை செலுத்­த­வி­ருக்­கிறது.

இரண்­டாம் உல­கப் போருக்குப் பிறகு அந்­நாட்­டின் ஆகப்­பெரிய தற்­காப்பு மாற்­றங்­க­ளைப் பரிந்­து­ரைக்­கும் மறு­ஆய்வு அறிக்கை நேற்று வெளி­யி­டப்­பட்­டது.

தொலை­தூர ஏவு­க­ணை­கள், ராணுவ வானூர்­தி­களை வாங்­கு­வது தொடர்­பி­லான செல­வி­னத்­துக்கு அர­சாங்­கம் முன்­னு­ரிமை செலுத்த அது பரிந்­து­ரைத்­தது.

இந்த மறு­ஆய்வை "இரண்­டாம் உல­கப் போருக்­குப் பிறகு மேற்­கொள்­ளப்­பட்ட மிக முக்­கி­ய­மான பணி," என்று ஆஸ்­தி­ரே­லியப் பிர­த­மர் ஆண்­டனி ஆல்பனிஸ் வர்­ணித்­தார்.

ஆஸ்­தி­ரே­லியா அமெ­ரிக்­கா­வுடன் சேர்ந்து மேலும் அணுக்­க­மா­கப் பணி­யாற்­றும். பசி­பிக், தென்­கி­ழக்­கா­சிய நாடு­கள் உடனான தற்­காப்பு ஒத்­து­ழைப்­பை­யும் ஆஸ்­தி­ரே­லியா வலுப்­படுத்த வேண்­டும் என்று அந்த மறு­ஆய்வு குறிப்­பிட்­டது.

அடுத்த பத்து ஆண்­டு­களில் தற்­காப்­புக்கு நிதி ஒதுக்­கீடு அதி­க­ரிக்­கும். ஆனால், அடுத்த நான்கு ஆண்­டு­களில் அது A$19 பில்­லி­யன் (S$17 பி.) என்ற அள­வில் நிலை­யாக இருக்­கும்.