'டிஸ்னிலேண்ட்' நிகழ்ச்சியில் தீச்சம்பவம்

'டிஸ்னிலேண்ட்' நிகழ்ச்சியில் தீச்சம்பவம்

1 mins read
1c93664d-9b75-419d-b168-189ad3d32210
-

சான் ஃபிரான்­சிஸ்கோ: அமெ­ரிக்­கா­வின் கலி­ஃபோர்­னியா மாநி­லத்­தில் இருக்­கும் 'டிஸ்­னி­லேண்ட்' கேளிக்கைப் பூங்­கா­வில் எதிர்­பாரா வித­மா­கத் தீ மூண்­டது.

கடந்த சனிக்­கி­ழமை 'டிரே­கன்' எனப்­படும் தீயைக் கக்­கும் கடல் நாகத்­தைக் கருப்­பொ­ரு­ளா­கக் கொண்ட 'ஃபன்­டேஸ்­மிக்' எனும் நிகழ்ச்­சி­யில் இச்­சம்­ப­வம் நிகழ்ந்­தது.

தீ மூண்­டது நிகழ்ச்­சி­யின் ஓர் அங்­கம் என்­று­கூட பார்­வை­யா­ளர்­கள் சிலர் நினைத்­த­னர்.

புகையை நுகர்ந்த குறைந்­தது ஆறு ஊழி­யர்­க­ளுக்கு சிகிச்சை அளிக்­கப்­பட்­ட­தென அன­ஹைம் நகர காவல்­துறை, தீய­ணைப்­புப் பிரி­வு­க­ளின் பேச்­சா­ளர் ஒரு­வர் தெரி­வித்­தார்.

உள்­ளூர் நேரப்­படி இரவு 11 மணிக்­குத் தீ மூண்­டது குறித்து தக­வல் தெரி­விக்­கப்­பட்டு இருக்­கிறது.

'ஃபன்­டேஸ்­மிக்' நிகழ்ச்சி தொடங்கி அரை மணி நேரம் கழித்து தக­வல் கொடுக்­கப்­பட்­டது.

தீச்­சம்­ப­வம் நிகழ்ந்த இடத்தைச் சுற்­றி­யுள்ள பகுதி உட­ன­டி­யாக மூடப்­பட்­டது. ஆனால், கேளிக்கைப் பூங்­கா­வின் எஞ்­சிய பகு­தி­கள் திறந்­து இ­ருந்­தன.

நிகழ்ச்சி நடந்த டாம் சாவ்­யர் தீவி­லி­ருந்து ஊழி­யர்­கள் பாது­காப்­பாக வெளி­யேற்­றப்­பட்­ட­தாக டிஸ்­னி­லேண்ட் தெரி­வித்­தது.