மணிலா: பிலிப்பீன்ஸ் தலைநகர் மணிலாவில் கொவிட்-19 தொற்று அதிகரித்துள்ளதை அடுத்து, அங்கு ரயில்களில் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அங்குள்ள ரயில்களில் தினமும் குறைந்தது 500,000 பேர் பயணம் செய்கின்றனர்.
ரயிலில் பயணம் செய்யும்போது பலரும் முகக்கவசத்தை நீக்கிவிடும் வேளையில், நினைவூட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

