நியூயார்க்: அமெரிக்காவில் ஓர் ஆடவர் தாம் எடுத்த ஒரே எண் வரிசையைக் கொண்டு 11 மாதங்களில் மூன்று முறை 'லாட்டரி' வென்றுள்ளார்.
தமது அடையாளத்தை வெளியிட விரும்பாத அந்த 52 வயது லாரி ஓட்டுநர், ஏப்ரல் 13ஆம் தேதி மூன்றாவது முறையாக லாட்டரி தொகையை வென்றதாகத் தெரிவிக்கப்பட்டது.
இம்முறை அவர் வென்ற பரிசுத்தொகை 50,000 டாலர் ($67,800).
ஒரே ஐந்து எண் வரிசையைப் பயன்படுத்தி இவர் கடந்த ஆண்டு மே மாதம் இருமுறை 50,000 டாலர் தொகையை வென்றிருக்கிறார்.
மூன்று முறையும் அந்த ஆடவர் '48548' எனும் எண் வரிசைக்கு ஒரு டாருக்கு குலுக்கல் சீட்டை வாங்கினார்.

