தைப்பே: தைவானுக்கு சுற்றுப்பயணிகளை ஈர்க்கும் நோக்கில், ஹோட்டலில் தங்குவோருக்கு NT$5,000 (S$218) பெறுமானமுள்ள மின்னிலக்க அட்டைகள் அல்லது அதே மதிப்புடைய பற்றுச்சீட்டுகளை தைவான் அடுத்த மாதம் வழங்கவிருக்கிறது.
அதிர்ஷ்டக் குலுக்கல் முறை மூலம் 500,000 வெளிநாட்டுப் பயணிகளுக்கு அந்தப் பற்றுச்சீட்டுகள் அல்லது அட்டைகள் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டது.
மே 1ஆம் தேதி நண்பகலில் இருந்து, இத்திட்டத்தில் பங்குபெறும் நான்கு விமான நிலையங்கள் வழியாக தைவானுக்குள் நுழைவோர் இந்தக் குலுக்கலுக்குத் தகுதிபெறுவர்.

