அருகிவரும் கழுகை வளர்க்கும் தாய்லந்து விலங்குத் தோட்டம்

1 mins read
fa1207ca-5e69-4307-bcd5-f4322e933adf
-

நாக்­கோன் ரட்­ச­சிமா (தாய்­லாந்து): 'ரெட்-ஹெட் வல்­சர்' எனும் இந்த அரி­ய­வகை கழுகு தாய்லாந்தின் நாக்­கோன் சட்­ச­சிமா விலங்­குத் தோட்­டத்­தில் வளர்க்­கப்­பட்டு வரு­கிறது. முதன்­மு­றை­யாக ஆசி­யா­வில் இக்கழுகு வளர்க்­கப்­ப­டு­கிறது.

இதைப் போல் வேடம் பூண்டு உணவு ஊட்டி விடு­வது போன்ற செயல்­களில் ஈடு­ப­டு­கின்­ற­னர் இயற்­கைப் பாது­காப்­பா­ளர்­கள். இதன் பெற்­றோர் எப்­படி இருந்­தி­ருப்­பர் என்ற உணர்வை இதற்­குத் தந்து பரா­ம­ரிப்பு நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்­வது பாது­காப்­பா­ளர்­க­ளின் இலக்கு.

முயல், மான், கோழி, எலி போன்ற விலங்­கு­கள் இதற்கு இறை­யாக வழங்­கப்­ப­டு­ம். உணவு உட்­கொண்ட பிறகு இந்­தக் கழுகு வைட்­ட­மின் டி ஊட்­டச்­சத்­தைப் பெற சூரிய ஒளி­யில் இளைப்­பா­றும்.