வாஷிங்டன்: சீனா, ஈரான் போன்ற நாடுகள் இணையத்தில் அதிக அடக்குமுறை நடவடிக்கைகளை மேற்கொள்வதாக அமெரிக்காவின் முன்னணி வேவுத்துறை அதிகாரி ஒருவர் எச்சரித்துள்ளார். உலகளவில் ஜனநாயக முறையில் இருக்கும் நடைமுறைகள் பாதிக்கப்படுவதாக அவர் கூறினார்.
பொய்த்தகவல், ஊடுருவல் மென்பொருள் உள்ளிட்ட தொழில்நுட்ப முறைகள் போன்றவை அமெரிக்காவின் தேசியப் பாதுகாப்புக்குப் பாதிப்பை ஏற்படுத்துவதாக திருவாட்டி ஏவ்ரில் ஹெய்ன்ஸ் கூறினார்.
சிறிதளவு எதிர்ப்பு இருந்தாலும் அதை அடக்க தொழில்நுட்ப முறைகள் பயன்படுத்தப்படுவதாக அவர் குறிப்பிட்டார். செயற்கை நுண்ணறிவின் தாக்கம் நிலைமையை மோசமாக்குவதாகவும் அவர் சொன்னார்.

