அலோர் ஸ்டார்: மலேசியாவின் கெடா மாநிலத்தில் பட்டப்பகலில் கடத்தப்பட்ட 28 வயது ஆடவர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டுக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். அவர் பாதுகாப்பாக இருப்பதாகவும் காவல்துறை குறிப்பிட்டது.
எனினும், கடத்தலுக்குப் பின்னால் உள்ள காரணம் இன்னும் தெரியவில்லை என்று கோத்தா ஸ்டார் காவல்துறை துணை ஆணையர் அகம்மது ஷுக்ரி மாட் கூறினார்.

