நெட்டோட்டத்தை முடித்துவிட்டுத் திரும்பியவர் வழியிலேயே மரணம்

நெட்டோட்டத்தை முடித்துவிட்டுத் திரும்பியவர் வழியிலேயே மரணம்

1 mins read
258dd148-7a9c-4b12-87e4-435bce81e460
-

லண்­டன்: வெற்­றி­க­ர­மாக நெட்­டோட்­டத்தை முடித்­த­வர் வீடு திரும்­பி­ய­போது வழி­யி­லேயே உயி­ரி­ழந்த சம்­ப­வம் லண்­ட­னில் நிகழ்ந்­தது.

நாட்­டிங்­ஹ­மைச் சேர்ந்த ஸ்டீவ் ஷேங்ஸ், 45, என்ற ஆட­வர் கடந்த ஞாயிற்­றுக்­கி­ழமை லண்­ட­னில் நடந்த நெட்­டோட்­டத்­தில் பங்­கேற்­றார். பந்­த­யத் தொலைவை 2 மணி நேரம் 53 நிமி­டம் 26 நொடி­களில் அவர் ஓடிக் கடந்­த­தாக ஏற்­பாட்­டா­ளர்­கள் தெரி­வித்­த­னர்.

பந்­த­யத் தொலைவை ஓடிக் கடந்த மகிழ்ச்­சி­யு­டன் வீடு திரும்­பிய அவரை மர­ணம் தழு­வி­யது. அவ­ரது மர­ணத்­திற்­கான கார­ணம் மருத்­து­வச் சோத­னைக்­குப்­பின் உறு­திப்­ப­டுத்­தப்­படும் என்று தெரி­விக்­கப்­பட்­டது.

"ஸ்டீவ் ஷேங்­சின் மர­ணச் செய்தி லண்­டன் நெட்­டோட்ட நிகழ்ச்­சி­யில் பங்­கேற்ற அனை­வ­ரை­யும் துய­ரத்­தில் ஆழ்த்­தி­யுள்­ளது," என்று ஏற்­பாட்­டா­ளர்­கள் கூறி­னர்.

ஸ்டீ­வின் நினை­வாக நிதி­திரட்டு இணை­யப்­பக்­கம் உரு­வாக்­கப்­பட்­டுள்­ளது.

42.195 கிலோ­மீட்­டர் பந்­த­யத் தொலைவை 48,000க்கும் மேற்­பட்­டோர் முழு­வ­து­மாக ஓடிக் கடந்­த­னர். ஆண்­க­ளுக்­கான பந்­த­யத்தை கென்­யா­வின் கெல்­வின் கிப்­டும் வென்­றார்.