ஓர் அமெரிக்க ஊழியரின் சராசரி ஆண்டு வருமானம் 82,700 வெள்ளி

ஓர் அமெரிக்க ஊழியரின் சராசரி ஆண்டு வருமானம் 82,700 வெள்ளி

1 mins read
2c4c6b28-46c9-4db7-984b-dde46a316115
-

வாஷிங்­டன்: அமெ­ரிக்­கா­வில் ஓர் ஊழி­யர் ஆண்­டுக்கு சரா­ச­ரி­யாக 61,900 டாலர் (82,700 வெள்ளி) சம்­பா­திப்­ப­தா­கத் தெரி­ய­வந்­துள்­ளது. எனி­னும், அதி­க­மா­னோர் பார்க்­கும் வேலை­க­ளைச் செய்­வோர் அதை­வி­டக் குறை­வான தொகையை ஈட்­டு­வ­தா­கத் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

'பிஎல்­எஸ்' எனப்­படும் தொழி­லா­ளர் புள்­ளி­வி­வ­ரப் பிரிவு வெளி­யிட்ட அறிக்­கை­யில் இந்­தப் புள்ளி­வி­வ­ரங்­கள் இடம்­பெற்­றுள்­ளன. அறிக்கை நேற்று முன்­தினம் வெளி­யி­டப்­பட்­டது.

சுமார் 830 வேலை­களில் வழங்­கப்­படும் சம்­பளங்­களை இந்த அறிக்கை கணிக்­கிறது.

ஆக அதி­க­மா­னோர் செய்­யும் 12 வேலை­களில் சென்ற ஆண்டுக்­கான சரா­சரி ஆண்டு வரு­மா­னம் 47,329 டால­ரா­கப் பதி­வா­னது.

சில்­லறை வர்த்­தக விற்­பனை­யா­ளர்­, துரித உண­வக ஊழி­யர்­ போன்ற வேலைகள் அவற்றில் அடங்கும்.