பக்முட்டில் குண்டு மழை

பக்முட்டில் குண்டு மழை

2 mins read
8a71e6d3-5e06-4713-a012-87f65c8ff524
-

கியவ்: உக்­ரே­னின் கிழக்­குப் பகுதி­யில் உள்ள பக்­முட் நக­ரைக் கைப்­பற்­றும் நோக்­கில் ரஷ்­யப் படை­கள் அங்கு தாக்­கு­தல்­களைத் தீவி­ரப்­ப­டுத்­தி­யுள்­ளன.

ரஷ்­யப் படை­கள் பக்­முட்­டில் தொடர்்ந்து குண்டு மழை பொழி­வ­தால் அந்­ந­க­ரம் நிலை­கு­லைந்­தி­ருக்­கிறது.

இருப்­பி­னும், உக்­ரே­னிய ராணுவ வீரர்­கள் பக்­முட் நக­ரி­லிருந்து பின்­வாங்­கா­மல் பதி­லடி கொடுத்து வரு­கின்­ற­னர்.

பக்­முட்­டி­லும் அதைச் சுற்­றி­யுள்ள பகு­தி­க­ளி­லும் ரஷ்­யப் படை­க­ளுக்­கும் உக்­ரே­னி­யப் படை­க­ளுக்­கும் இடையே மிகக் கடு­மை­யான சண்டை நில­வு­வ­தாக உக்­ரே­னிய ஆயு­தப் படை­தெரி­வித்­தது.

தனது வீரர்­கள் எதிர்த்­துப் போரிட்­ட­தில் பக்­முட்­டுக்கு வட­மேற்­கில் உள்ள இரண்டு கிரா­மங்­க­ளுக்­குள் ரஷ்­யப் படை­க­ளால் நுழைய முடி­யா­மல் போன­தாக அது கூறி­யது.

கடந்த 24 மணி நேரத்­தில் ரஷ்­யப் படை­கள் பீரங்­கி­கள், ஏவு­க­ணை­கள் ஆகி­ய­வற்­றைப் பயன்­ப­டுத்தி 324 தடவை தாக்­கு­தல் நடத்­தி­ய­தாக உக்­ரே­னின் கிழக்­குப் பகு­தி­க­ளைத் தற்­காக்­கும் ராணு­வப் பிரி­வின் செய்­தித்­தொ­டர்­பா­ளர் நேற்று முன்­தி­னம் தெரி­வித்­தார்.

"பக்­முட்­டில் உள்ள கட்­ட­டங்­களை ரஷ்­யப் படை­கள் தகர்த்து வரு­கின்­றன. அவ்­வாறு செய்­வ­தன் மூலம் உக்­ரேன் ராணுவ வீரர்­க­ளுக்­குப் பாது­காப்பு அரண்­களை அமைக்க முடி­யாத நிலை ஏற்­பட்­டுள்­ளது," என்று செய்­தித்­தொ­டர்­பா­ளர் தெரி­வித்­தார்.

இதற்­கி­டையே, போது­மான தோட்­டாக்­கள் இல்­லாத நிலை ஏற்­படும் அபா­யம் இருப்­ப­தாக பக்­முட்­டைத் தற்­காத்து ரஷ்­யப் படை­க­ளுக்கு எதி­ரா­கப் போரிட்டு வரும் உக்­ரே­னிய வீரர்­கள் கவலை தெரி­வித்­துள்­ள­னர்.

இந்­நி­லை­யில், உக்­ரே­னின் வட­கி­ழக்­குப் பகு­தி­யில் உள்ள குபி­யான்ஸ்க் நக­ரைக் குறி­வைத்து ரஷ்­யப் படை­கள் இது­வரை இல்­லாத அள­வுக்­குத் தாக்­கு­தல் நடத்­தி­யுள்­ள­தாக உக்­ரே­னிய ராணு­வம் கூறி­யது.

ரஷ்யா பாய்ச்­சிய ஏவு­கணை உக்­ரே­னின் மைக்­கோ­லேவ் பகுதி­யில் உள்ள அடுக்­கு­மா­டிக் குடி­யி­ருப்­பை­யும் தனி­யார் வீடு ஒன்­றை­யும் சேதப்­ப­டுத்­தி­ய­தா­கத் தெரி­விக்­கப்­பட்­டது.