நோய்வாய்ப்பட்டும் அயராது பிரசாரம் செய்யும் எர்டோவான்

நோய்வாய்ப்பட்டும் அயராது பிரசாரம் செய்யும் எர்டோவான்

1 mins read
5767c97d-bcdb-498d-86c7-3f34fafea257
-

இஸ்­தான்­புல்: துருக்­கி­யின் அதி­பர் ரெசெப் தயீப் எர்­டோ­வான் நோய்­வாய்ப்­பட்­டுள்­ள­போ­தி­லும் அடுத்த மாதம் நடை­பெ­றும் நாடா­ளு­மன்ற, அதி­பர் தேர்­தல்­க­ளுக்­காக ஓய்­வின்றி பிர­சா­ரம் செய்து வரு­கி­றார்.

ரஷ்யா கட்டிய அணுவாயுத ஆலையை அவர் காணொளி இணைப்பு மூலம் திறந்துவைத்தார்.

கடந்த செவ்­வாய்க்­கி­ழமை தொலைக்­காட்­சிக்கு அவர் அளித்த பேட்டி நேரடி ஒளி­ப­ரப்பு செய்­யப்­பட்­டது.

அப்­போது 69 வயது அதி­பர் எர்­டோ­வா­னுக்­குத் திடீ­ரென்று உடல்­ந­லக்­கு­றைவு ஏற்­பட்­டது.

பேட்­டி­யின்­போது திரு எர்­டோ­வான் பல­வீ­ன­மா­கக் காணப்­பட்­டார். பேட்டி தொடங்கி பத்து நிமி­டங்­களில் நிகழ்ச்சி தடை

­பட்­டது. யாரோ இடை­வி­டாது இரு­மும் சத்­தம் கேட்­டது.

கிட்டத்தட்ட 15 நிமிடங்கள் கழித்து தொலைக்காட்சியில் தோன்றிய அதிபர் எர்டோவான் பேட்டி தடைபட்டதற்கு மன்னிப்பு கேட்டுக்கொண்டார்.