பாப்புவா நியூ கினிக்கு பைடன் பயணம்

பாப்புவா நியூ கினிக்கு பைடன் பயணம்

1 mins read
c7c52991-e01d-412a-b9d1-5d2d25e24a4c
-

போர்ட் மோரேஸ்பி: அமெ­ரிக்க அதி­பர் ஜோ பைடன் பாப்­புவா நியூ கினிக்கு அதி­கா­ர­பூர்­வப் பய­ணம் மேற்­கொள்ள இருக்­கி­றார். அவ்­வாறு நிகழ்ந்­தால் கடந்த நாறு ஆண்­டு­களில் பாப்­புவா நியூ கினிக்­குப் பத­வி­யில் இருக்­கும்­போது செல்­லும் முதல் அமெ­ரிக்க அதி­பர் எனும் பெருமை அதி­பர் பைட­னைச் சேரும்.

ஜப்­பா­னில் நடை­பெ­றும் ஜி-7 உச்­ச­நிலை மாநாட்­டி­லும் ஆஸ்­தி­ரே­லி­யா­வின் சிட்னி நக­ரில் நடை­பெ­றும் குவாட் உச்­ச­நிலை மாநாட்­டி­லும் திரு பைடன் கலந்து­கொள்­கி­றார்.

இதற்­கி­டையே, அவர் அடுத்த மாதம் பாப்­புவா நியூ கினிக்­குப் பய­ணம் மேற்­கொள்ள இருப்­ப­தாக அந்­நாட்­டின் வெளி­யு­றவு அமைச்­சர் ஜஸ்­டின் காட்­செங்கோ தெரி­வித்­தார்.

"அதி­பர் பைடன் மே மாதம் 22ஆம் தேதி காலை போர்ட் மொரேஸ்பி வந்­த­டை­கி­றார். பாப்­புவா நியூ கினி­யில் அவர் மூன்று மணி நேரத்துக்கு மட்டுமே இருப்­பார்," என்­று அமைச்­சர் காட்­செங்கோ கூறி­னார். பாப்­புவா நியூ கினி­யின் தலை­வர்­க­ளு­டன் பொரு­ளி­யல், பாது­காப்பு, பரு­வ­நிலை மாற்­றம் ஆகி­யவை குறித்து அதி­பர் பைடன் பேசு­வார் என்று எதி­ர்பார்க்­கப்­ப­டு­கிறது.

இது ஒரு­பு­றம் இருக்க, அதி­பர் பைடன் தென்­கொ­ரி­யா­வுக்கு ஆறு நாள் அதி­கா­ர­பூர்­வப் பய­ணம் மேற்­கொண்டார். பய­ணத்­தின் கடைசி நாளன்று நடை­பெற்ற விழா­வில் தென்­கொ­ரிய அதி­பர் யூன் சுக் யோல் ஆங்­கி­லப் பாடல் ஒன்­றைப் பாடி அசத்­தி­னார். அதி­பர் யூனுக்கு பாட்­டுப் பாடும் திறமை இருப்­பது தமக்­குத் தெரி­யாது என்று கூறி அவ­ரைப் பாராட்­டி­னார் அதி­பர் பைடன்.