ஜோகூர் பாரு: உட்லண்ட்ஸ் பாலத்தைக் கடந்ததும் அமைந்துள்ள ஜோகூர் சோதனைச்சாவடிக் கட்டடத்திலிருந்து வெளியேறும் இடத்தில் துர்நாற்றம் வீசுவதாக பல புகார்கள் எழுந்தன.
இதையடுத்து, துப்புரவுப் பணிகள் உடனடியாக நடத்தப்பட வேண்டும் என்று ஜோகூர் முதல்வர் ஓன் ஹஃபிஸ் கஸி உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி, துப்புரவுப் பணிகள் நடைபெற்றுக்கொண்டிருப்பதாக மலேசிய அதிகாரிகள் தெரிவித்தனர்.
நீர்க் கசிவு காரணமாக துர்நாற்றம் வீசுவதாகவும் அது கழிவு நீர் அல்ல என்றும் அடைத்துக்கொண்ட நீர்த்தொட்டியால் ஏற்பட்டது என்றும் தெரிவிக்கப்பட்டது.

