பிலிப்பீன்சைக் குறைகூறும் சீனா

பிலிப்பீன்சைக் குறைகூறும் சீனா

2 mins read
000fb76d-01b2-494f-89d8-9f35a443e705
-

பெய்­ஜிங்: தென்­சீ­னக் கட­லில் சீனா­வின் கட­லோ­ரக் காவல்­படைக் கப்­பலும் பிலிப்­பீன்­சின் சுற்­றுக்­கா­வல் பட­கும் கடந்த ஞாயிற்­றுக்­கி­ழ­மை­யன்று மோத­விருந்­தன. பிலிப்­பீன்­சின் சுற்­றுக்­கா­வல் படகு கோப­மூட்­டும் செய­லில் ஈடு­பட்­டதே அதற்­குக் கார­ணம் என்று சீனா கூறி­யுள்­ளது.இச்செயல் திட்­ட­மிட்டு மேற்­கொள்­ளப்­பட்­ட­து என்றும் சீனா சொல்­கிறது.

இரு நாடு­களும் பல பதற்­றம் நிறைந்த நட­வ­டிக்­கை­களில் ஈடு­பட்­டுள்ளன. அவற்றில் ஸ்பி­ராட்லி தீவு­க­ளுக்கு அருகே இடம்­பெற்ற இச்சம்பவமும் அடங்­கும்.

பிலிப்­பீன்­சின் கரை­யோ­ரக் காவல்­படை ஒரு வார­மாக தென்­சீ­னக் கட­லில் சோதனை நட­வடிக்­கை­களை மேற்­கொண்­டது. பிலிப்­பீன்ஸ் அதி­பர் ஃபெர்டி­னண்ட் மார்­கோஸ் ஜூனி­ய­ரை­யும் அந்­நாட்­டின் வெளி­ய­றவு அமைச்­ச­ரை­யும் சந்­திக்க சீன வெளி­ய­றவு அமைச்­சர் சின் காங் சென்ற வார இறு­தி­யில் மணி­லா­வுக்­குப் பய­ணம் மேற்­கொண்­டார். அவற்­றைத் தொடர்ந்து தென்­சீ­னக் கட­லில் இந்­நிலை உரு­வா­னது.

பிலிப்­பீன்­சின் கரை­யோ­ரக் காவல்­ப­டைப் பட­கு­கள் தென்­சீனக் கட­லில் இருக்­கும் செக்­கண்ட் தாமஸ் ஷோல் பகு­தியை நோக்­கிச் சென்­றன. செக்­கண்ட் தாமஸ் ஷோல், சீனா­வில் ரென்'அய் ஜியாவ் என்­றழைக்­கப்­படு­கிறது.

பிலிப்­பீன்­சின் ஒரு படகு அப்­ப­கு­தியை நெருங்­கி­ய­போது சீனா­வின் கட­லோ­ரக் காவல்­ப­டைக் கப்­பல் ஒன்று அதன் பாதையில் வந்­தது. பரப்­ப­ள­வில் பிலிப்­பீன்­சின் பட­கில் இரு மடங்­கிற்­கும் மேலா­னது சீனா­வின் கப்­பல்.

ஒரு கிலோ­மீட்­ட­ருக்­கும் குறை­வான தூரத்­தில் இருந்த பிலிப்­பீன்­சின் வேறொரு கட­லோ­ரக் காவல்­ப­டைக் கப்­ப­லில் இருந்த செய்­தி­யா­ளர்­கள் இச்­சம்­ப­வத்­தைக் கண்­ட­னர். அந்­தச் செய்­தி­யா­ளர்­கள் ஏஎ­ஃப்பி செய்தி நிறு­வ­னத்­தைச் சேர்ந்­த­வர்­கள்.

தென்­சீ­னக் கட­லின் பெரும்­பா­லான பகு­தி­களை சீனா சொந்­தம் கொண்­டாடி வரு­கிறது. ஆண்­டு­தோ­றும் அந்­தக் கடல் வழியே கிட்­டத்­தட்ட மூன்று டிரில்­லி­யன் டாலர் (நான்கு டிரில்­லி­யன் வெள்ளி) மதிப்­பி­லான பொருள்­கள் கொண்டு செல்­லப்­ப­டு­கின்றன.

தென்­சீ­னக் கட­லைச் சுற்­றி­யுள்ள பிலிப்­பீன்ஸ், வியட்­னாம் போன்ற நாடு­களும் அங்­குள்ள பல்­வேறு பகு­தி­கள் தங்­க­ளுக்­குச் சொந்­த­மா­னவை எனக் கூறி வரு­கின்­றன. அப்­ப­கு­தி­யில் ஆதிக்­கம் செலுத்­தும் நட­வ­டிக்­கை­களை நிறுத்­து­மாறு பெய்­ஜிங்­கி­டம் பிலிப்­பீன்ஸ் பல­முறை எடுத்­து­ரைத்­துள்ளது.

'பிலிப்பீன்ஸ் சுற்றுக்காவல் படகின் செயல்தான் மோதல் நிகழவிருந்ததற்குக் காரணம்'