மலேசியாவில் வெப்பத் தாக்கத்தால் மாண்டதாக நம்பப்படும் குழந்தை

மலேசியாவில் வெப்பத் தாக்கத்தால் மாண்டதாக நம்பப்படும் குழந்தை

1 mins read
04471f7d-268f-4c0b-96e8-d285ea3ecf60
-

பெட்­டா­லிங் ஜெயா: மலே­சி­யா­வின் கிளந்­தான் மாநி­லத்­தில் ஒன்­றரை வயது குழந்தை ஒன்று வெப்­பத்­ தாக்­கத்­துக்­குப் பலி­யா­ன­தாக நம்­பப்­ப­டு­கிறது. இச்­சம்­ப­வம் கோத்தா பாரு­வில் உள்ள கோத்தா எனும் கம்­பத்­தில் நிகழ்ந்­தது.

தனது மகள் முன்னதாக இரு­மத் தொடங்­கி­ய­தா­க­வும் வாந்தி எடுத்து வந்­த­தா­க­வும் மாண்ட குழந்­தை­யின் தந்­தை­யான திரு அக­மது ஃபாரிஸ் முகம்­மது நாசிர் தெரி­வித்­தார். நூர் இமானி என்ற அவ­ரின் மகள் கடந்த செவ்­வாய்க்­கி­ழ­மை­யன்று அவ­ரின் வீட்­டில் மாண்­ட­தாக சில மலே­சிய ஊட­கங்­கள் கூறின.

இதற்­கி­டையே, கிளந்­தான் மாநி­லத்­தில் ஒரு 11 வயது சிறு­வனும் வெப்­பத்­ தாக்­கத்­துக்குப் பலியானதாகத் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. பாச்­சோக் வட்­டா­ரத்­தில் உள்ள பெரு­பொக் எனும் கம்­பத்­தில் அச்­சம்­ப­வம் நிகழ்ந்­தது.

சி­று­வ­னின் தாயான திரு­வாட்டி வானி, திரு அக­மது ஃபாரிஸ் இரு­வ­ரும் தங்­கள் பிள்­ளை­கள் வெப்­பத்­தாக்­கத்­துக்கு ஆளா­ன­தைப் பிரே­தப் பரி­சோ­தனை முடி­வு­கள் உறு­திப்­ப­டுத்­தி­ய­தா­கக் கூறி­னர்.