மட்ரிட்: ஸ்பெயின் உட்பட பல மேற்கு ஐரோப்பிய நாடுகளில் அடுத்த மாதம் வழக்கத்துக்கு மாறாக அனல் காற்று வீசும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நேற்று முன்தினம் தென் ஸ்பெயினின் கொர்டோபா விமான நிலையம் இருக்கும் பகுதியில் வெப்பநிலை 38.8 டிகிரி செல்சியசாகப் பதிவானது. ஏப்ரல் மாதத்தில் ஸ்பெயினில் இவ்வளவு அதிக வெப்பநிலை பதிவானதில்லை. இந்நிலையில், மேற்கு ஐரோப்பாவில் வறட்சி ஏற்படக்கூடும் என்ற அச்சம் எழுந்துள்ளது.

