ஆஸ்திரேலிய மாணவர் விசா சர்ச்சை: இந்திய மாணவர்களுக்குக் கட்டுப்பாடு

ஆஸ்திரேலிய மாணவர் விசா சர்ச்சை: இந்திய மாணவர்களுக்குக் கட்டுப்பாடு

1 mins read
dd0b689f-cf23-4f18-adbe-ba0240908248
-

சிட்னி: இந்­தி­யா­வின் பல்­வேறு மாநி­லங்­க­ளைச் சேர்ந்த மாண­வர்­க­ளுக்கு எதி­ரா­கப் பல ஆஸ்­தி­ரே­லி­ய பல்­கலைக்­க­ழ­கங்­கள் கட்­டுப்­பா­டு­களை விதித்­துள்­ளன. சில இந்­திய மாண­வர்­கள் ஆஸ்­தி­ரே­லி­யா­வில் வேலை விசா பெறும் நோக்­கு­டன் மாண­வர் விசா­வுக்கு விண்­ணப்­பிப்­ப­தா­கக் கரு­தப்­ப­டு­வது இதற்­குக் கார­ணம்.

மாண­வர் விசா­வுக்­கான நிபந்­தனை­களை முடுக்­கி­வி­டப்­போ­வ­தாக ஆஸ்­தி­ரே­லி­யா­வின் மத்­திய அர­சாங்­கம் கடந்த வியா­ழக்­கி­ழ­மை­யன்று அறி­வித்­தி­ருந்­தது. அதைத் தொடர்ந்து இந்­ந­ட­வ­டிக்கை எடுக்­கப்­ப­டு­கிறது.

குறைந்­தது ஐந்து ஆஸ்­தி­ரே­லி­ய பல்­க­லைக்­க­ழ­கங்­கள் சில இந்­திய மாநி­லங்­க­ளி­லி­ருந்து வரும் மாண­வர்­க­ளுக்கு எதி­ரா­கக் கட்­டுப்­பா­டு­களை விதித்­துள்­ள­தாக 'தி ஏஜ்' நாளி­தழ் நடத்­திய விசா­ர­ணை­யில் தெரி­ய­வந்­தது. சில பல்­கலைக்­க­ழ­கங்­கள் தடை­யும் விதித்துள்ளன.

பொது­வாக வடஇந்­திய மாநி­லங்­க­ளைச் சேர்ந்­தோர் ஆஸ்­தி­ரே­லி­யா­வின் மாண­வர் விசா­வைத் தவ­றா­கப் பயன்­ப­டுத்­தும் முயற்­சி­யில் ஈடு­படு­வ­தா­கத் தெரி­விக்­கப்­பட்­டுள்து. குறிப்பாக பஞ்­சாப், ஹரி­யானா மாநி­லங்­களில் இப்­பி­ரச்­சினை அதி­கம் இருப்பதாகக் கூறப்படுகிறது.