சோல்: தென்கொரியாவில் அணுவாயுதம் தாங்கிய நீர்மூழ்கிக் கப்பல்களை நிலைநிறுத்த அமெரிக்கா அண்மையில் ஒப்புக்கொண்டது. தென் கொரியா-அமெரிக்கா இடையேயான இந்த ஒப்பந்தம், இவ்வாரம் வாஷிங்டனில் அதிபர் ஜோ பைடன், தென் கொரிய பிரதிநிதி யூன் சுக்-யோல்ஸு இடையே நடந்த சந்திப்பில் அறிவிக்கப்பட்டது.
இதுகுறித்து வடகொரிய தலைவர் கிம்-மின் சகோதரி கிம் யோ ஜாங் கூறும்போது, "கொரியத் தீபகற்பத்தின் அருகே அணுவாயுதங்களை எதிரிகள் எவ்வளவு அதிகமாகப் பயன்படுத்துகிறார்களோ, அந்த அளவுக்கு வட கொரியாவின் தற்காப்பு நடவடிக்கைகளும் அதிகரிக்கும். எதிரிகளின் நடவடிக்கையானது வட கிழக்கு ஆசியா, உலகத்தின் அமைதி மற்றும் பாதுகாப்பில் இன்னும் மோசமான ஆபத்தை உருவாக்கும்," என்று எச்சரித்திருக்கிறார்.

