நிலை தடுமாறிய ஓட்டுநர்; சக மாணவர்களைக் காப்பாற்றிய சிறுவன்

நிலை தடுமாறிய ஓட்டுநர்; சக மாணவர்களைக் காப்பாற்றிய சிறுவன்

1 mins read
9026b951-e7a0-423e-9a09-f59bc24e9bac
-
multi-img1 of 2

மிச்­சி­கன்: அமெ­ரிக்­கா­வில் பள்ளி பேருந்­தின் ஓட்­டு­நர் திடீ­ரென தடுமாறி, மயக்­க­ம­டைந்ததைத் தொடர்ந்து, உட­ன­டி­யாக பேருந்தை நிறுத்­திய சிறு­வ­னின் செயலை அனை­வ­ரும் பாராட்டி வரு­கின்­ற­னர்.

அமெ­ரிக்­கா­வின் மிச்­சி­கன் நக­ரைச் சேர்ந்த டில்­லன் ரீவ்ஸ், மிச்­சி­க­னின் வார­னில் உள்ள கார்ட்­டர் நடு­நி­லைப் பள்­ளி­யில் ஏழாம் வகுப்பு படித்து வரு­கி­

றார்.

இந்­நி­லை­யில், கடந்த ஏப்­ரல் 26ஆம் தேதி பள்ளி பேருந்­தில் 66 மாணவ மாண­வி­கள் சென்­றனர்.

அப்­போது வண்­டியை ஓட்­டிய ஓட்­டு­ந­ருக்கு திடீ­ரென உடல் நலம் சரி­யில்­லா­மல் போனது. எனவே, அவ­ரால் தொடர்ந்து பேருந்தை ஓட்ட முடி­யாத சூழல் ஏற்­பட்­டது.

அப்போது பேருந்­தின் முன் இருக்­கை­யில் அமர்ந்­தி­ருந்த மாண­வன் டில்­லன் ஓட்­டு­நர் தடு­மா­று­வ­தைக் கவ­னித்­தான்.

உடனே தாவிக்­குதித்து ஓட்­டு­நர் அருகே சென்ற மாண­வன் வண்­டியை பத்திரமாக நிறுத்தினான்.

பின்­னர் 911 என்ற அவ­சர எண்­ணுக்கு யாரா­வது அழை­யுங்­கள் எனக் கத்­தி­னான்.

தகவலறிந்து விரைந்து வந்த தீய­ணைப்பு படையி­னர் ஓட்­டு­நரை மருத்­து­வ­மனைக்கு அழைத்துச் சென்­ற­னர்.