செய்திக்கொத்து

செய்திக்கொத்து

1 mins read
c899ff51-d071-4225-ae5f-a00dac518827
-

மகன் மரணம்; தாய், தந்தை கைது

ஜோகூர் பாரு: நான்கு வயது சிறுவனைத் துன்புறுத்தி, அவனின் மரணத்திற்குக் காரணமான தாயும் மாற்றான் தந்தையும் ஜாலான் அமானில் கைது செய்யப்பட்டனர்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அந்தச் சிறுவன் மாண்டுவிட்டதை இஸ்கந்தர் புத்தேரி மாவட்டத் தலைமை காவல்துறை அதிகாரி ர‌ஹ்மத் அரிஃபின் உறுதி செய்தார். சிறுவனின் தலை, இரண்டு காதுகளின் பின்புறம், வயிற்றுப் பகுதி, இரண்டு கால்கள் ஆகிய உறுப்புகள் காயமடைந்திருந்ததாக அவர் சொன்னார்.

கையாலும் துணிகளை மாட்டுவதற்குப் பயன்படுத்தப்படும் ஹேங்கர் போன்றவற்றைக் கொண்டு சிறுவன் தாக்கப்பட்டுள்ளான். சிறுவனைத் தாக்கியதை பெற்றோர் ஒப்புக்கொண்டனர். மாற்றான் தந்தைமீது ஏற்கெனவே குற்றப்பதிவுகள் உள்ளதாக போலிஸ் அதிகாரி சொன்னார்.

காரைப் பின்னால் இயக்கிய கணவர்; பெண் உயிரிழப்பு

குலிம்: கணவர் காரை பின்னால் இயக்கியதில் எதிர்பாராதவிதமாக பெண் மாண்டுபோனார். மலேசியாவின் தாமன் சிலாசிஹ் பகுதியில் இச்சம்பவம் நடந்தது. கணவன், மனைவி இருவரும் 60 வயது மதிக்கத்தக்கவர்கள் என்றும் வீட்டில் இருந்து அவர்கள் வெளியே புறப்படுவதற்கு தயாராகி கொண்டிருந்தபோது விபத்து ஏற்பட்டது என்றும் குலிம் மாவட்ட காவல்துறை அதிகாரி சொன்னார். வீட்டிற்குள் சென்று எதையோ எடுத்து வருவதற்காக அப்பெண் காரில் இருந்து இறங்கினார். அப்போது, கணவர் எதிர்பாராதவிதமாக காரைப் பின்னால் இயக்கியதில் அப்பெண்மீது கார் மோதியது.