கிளிவ்லாண்ட்: டெக்சசில் உள்ள கிளிவ்லாண்டில் எட்டு வயது குழந்தை உட்பட ஐந்து பேரை கொடூரமாகச் சுட்டுக் கொன்ற கொலையாளியை காவல்துறையினர், மத்திய புலனாய்வுப் பிரிவின் உதவியுடன் தேடி வருகின்றனர்.
வீட்டின் வெளியே துப்பாக்கியால் சுட்டுக் கொண்டிருந்த அவனை நிறுத்துமாறு அண்டை வீட்டார் கூறியுள்ளனர். இதை யடுத்து துப்பாக்கிக்காரன் பக்கத்து வீட்டில் இருந்த ஐவரை சுட்டுக் கொன்றுள்ளான்.
"அவனை ஆயுதம் ஏந்திய அபாயகரமானவன்," என்று மத்திய புலனாய்வுப் பிரிவின் சிறப்பு அதிகாரி ஜேம்ஸ் ஸ்மித் தெரிவித்தார்.
"அவன் வெளியே ஏதோ ஒரு இடத்தில் இருக்கிறான். அவன் சமூகத்துக்கு ஆபத்தானவன்," என்றார் அவர்.
வெள்ளிக்கிழமை இரவு ஃபிரான்சிஸ்கோ ஒரோபீஸா, 38, அண்டை வீட்டுக்காரர்களை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றான் என்று கூறப்படுகிறது.
வீட்டில் குழந்தை தூங்கிக் கொண்டிருப்பதால் வெளியிடத்தில் துப்பாக்கியால் சுடுவதை நிறுத்து என்று அண்டை வீட்டர்கள் அவனிடம் தெரிவித்தனர்.
ஆனால் அவர்களின் வேண்டுகோளை புறக்கணித்த அவன், ஒரு கட்டத்தில் அண்டை வீட்டாரின் வீட்டுக்கதவு அருகே துப்பாக்கியுடன் செல்வது கண்காணிப்புக் கேமராவில் பதிவாகியுள்ளது என்று சான் ஜெசின்டோ ஷெரிஃப் கிரேக் கேபெர்ஸ் நேற்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
"பின்னர் அதே வீட்டின் பல அறைகளில் பலர் இறந்துகிடந்தனர். இரண்டு பெண்கள் படுக்கை அறையில் கொல்லப்பட்டனர். இவர்கள் உயிர்பிழைத்த இரண்டு குழந்தையைக் காப்பாற்றுவதற்காக தங்கள் உயிரைப் பணயம் வைத்துள்ளனர்," என்றார் அவர். ஒரோசீஸாவின் கைப்பேசியை வைத்து காவல்துறையினர் அவனைத் தேடினர்.
ஆனால் அவன் நழுவி விட்டான்.

