சோல்: அமெரிக்கா-தென் கொரியாவுக்கு எதிராக ராணுவத் தற்காப்பு ஆற்றலை மேலும் வலுப்படுத்தப் போவதாக நேற்று வட கொரியாவின் யோன்ஹாப் செய்தி நிறுவனம் தெரி வித்தது. அண்மைய தென்கொரிய அதிபர் யூன் சுக்-இயோலின் அமெரிக்கப் பயணத்தை விமர்சித்த யோன்ஹாப்பின் ஆங்கில கட்டுரை, இரு நாடுகளுக்கு இடையிலான தற்காப்பு ஒப்பந்தம், வடகொரி யாவுக்கு எதிரான விரோதக் கொள்கையின் வெளிப்பாடு என்றது. அவரது அமெரிக்கப் பயணம் ஆத்திரமூட்டும் அபாய கரமான அணுவாயுதப் போரை ஏற்படுத்தக்கூடியது என்றும் அது கூறியது. வடகொரியா இவ்வாண்டு 17க்கும் மேற்பட்ட புவியீர்ப்பு ஏவுகணைகளைச் சோதித்து உள்ளது. அவற்றில் மூன்று அணுவாயுதங்களை ஏந்திச் செல்லக்கூடியவை.
வடகொரியா சூளுரை
1 mins read
-

