'மலேசிய ஐக்கிய அரசாங்கம் நீண்டகாலம் நீடிக்காது'

'மலேசிய ஐக்கிய அரசாங்கம் நீண்டகாலம் நீடிக்காது'

1 mins read
bfd14dee-22cc-4a86-8325-724dc819cb07
-

கோலா­லம்­பூர்: தேசிய முன்­னணி, பக்­கத்­தான் ஹரப்­பான் இடை­யி­லான பல­வீ­ன­மான கூட்­டணி அமானா நெகா­ரா­வால் நீண்ட காலம் நீடிக்­காது என்று அம்னோ உச்­ச­மன்ற உறுப்­பினரான புவாட் ஸர்­காஷி தெரி­வித்­துள்­ளார்.

தண்­ட­னை பெற்ற முன்­னாள் பிர­த­மர் நஜிப் ரசாக்­கிற்கு மாமன்­ன­ரி­டம் பொது­மன்­னிப்­புக் கோரும் அம்­னோ­வின் அழைப்பை அமானா நெகாரா நிரா­க­ரித்­து­விட்­டது. இத­னால் ஆளும் கூட்­ட­ணிக்கு சோதனை ஏற்­பட்­டுள்­ளது என்று அம்னோ கட்­சி­யைச் சேர்ந்த ஜோகூர் மாநில சட்­ட ­மன்ற உறுப்­பி­ன­ரு­மான புவாட் ஸர்­காஷி கூறி­னார்.

"அமானா கட்­சி­யு­டன் நல்ல நண்­பர்­க­ளாக இருப்­பது சிர­மம். ஐக்கிய அர­சாங்­கம் நீண்ட காலம் நீடிப்­ப­தற்­கான உத்­த­ர­வா­தம் அளிக்­காத கட்­சி­தான் அமானா," என்று தமது ஃபேஸ் புக் பதி­வில் அவர் குறிப்­பிட்­டுள்­ளார். அண்­மை­யில் அமானா துணைத் தலை­வர் சலா­ஹு­தின் அயூப், சட்­டத்தை மதித்து நடக்க வேண்­டும் என்று கூறி­யி­ருந்­தார்.

நஜிப்­பின் பொது­மன்­னிப்பு கோரிக்கை நிரா­க­ரிக்­கப்­பட வேண்­டும் என்று சட்ட துறை, தொடர்பு துணை இயக்­கு­நர் காலித் சமத் தெரி­வித்­தி­ருந்­தார்.

இவர்­க­ளின் கருத்­து­க­ளுக்கு பதி­ல­ளிக்­கும் வகை­யில் புவாட் ஸர்­காஷி நேற்று பேசி­யி­ருந்­தார்.

1எம்­டி­பி­யின் முன்­னாள் கிளை நிறு­வ­ன­மான எஸ்­ஆர்சி இண்­டர்­நே­ஷ­ன­லின் 42 மில்­லி­யன் ரிங்­கிட் முறை­கேடு வழக்­கில் நஜிப்­புக்கு 12 ஆண்டு சிறைத் தண்­டனை விதிக்கப்­பட்­டது. அவர் எட்டு மாதங்­க­ளாக சிறை­யில் இருந்து வரு­கி­றார். 1எம்­டிபி தொடர்­பாக அவர் மீதான பல வழக்­கு­கள் நிலு­வை­யில் உள்­ளன.