நஜிப் மகனுக்கு நிச்சயதார்த்தம்
பிலிப்பீன்சில் நால்வர் காணவில்லை
மணிலா: பிலிப்பீன்சில் உள்ள உலகப் பாரம்பரிய பட்டியலில் இடம்பெற்ற கடல் சரணாலயத்துக்கு நேற்று படகில் சென்றவர்களில் நான்கு பேர் காணாமல் போயினர். 'டிரீம் கீப்பர்' எனும் படகு மூழ்கியதைத் தொடர்ந்து 28 பேர் மீட்கப்பட்டனர் என்று பிலிப்பீன்ஸ் கடலோர காவல்படை தெரிவித்தது.
பியு தாய் கட்சி கை ஓங்குகிறது
பேங்காக்: தாய்லாந்தில் தேர்தல் சூடுபிடித்து வரும் வேளையில் எதிர்க்கட்சியான பியு தாய் கட்சிக்கு செல்வாக்கு அதிகரித்து வருதாக அந்நாட்டின் தகவல்கள் தெரிவிக்கின்றன. 162,000 வாக்காளர்களிடம் நடத்தப்பட்ட சுவான் டுசிட் கருத்துக்கணிப்பில் 41.37% பியு தாய் கட்சிக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
கோலாலம்பூர்: முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கின் இளைய மகனான நோரஷ்மான் நஜிப்பின் திருமண நிச்சயதார்த்த நிகழ்ச்சியில் பல அம்னோ தலைவர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர். சனிக்கிழமை இரவு நடைபெற்ற இந்நிகழ்வில் பங்கேற்ற அம்னோ உச்சமன்ற உறுப்பினர் புவாட் ஸர்காஷி, நஜிப் இல்லாததால் இந்த நிகழ்வு முழுமையற்ற உணர்வை ஏற்படுத்தியதாகத் தெரிவித்தார். "அஷ்மான்-நிக்கோலா திருமணத்தில் திரு நஜிப் கலந்துகொள்ள பிரார்த்தனை செய்வோம்," என்றும் அவர் தெரிவித்தார்.

